சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!
வெல்லவாயவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெல்லவாய- ஊவா குடாஓயா பகுதியில் இருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் சிதைவடைந்த நிலையில் காட்டுப்பகுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அட்டாலிவெவ பிரதேசத்தை சேர்ந்த எழுபது வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed